இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரிய கதையின் நாயகனாக நடிக்க, விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விடுதலை திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இத்தனைக்கும் இந்த படத்தின் முதல் பாகம் மட்டுமே வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் வெற்றி காரணமாக அடுத்த இரண்டாம் பாகத்தை விரைவில் வெளியிட சொல்லி ரசிகர்களிடம் இருந்து தொடர்ந்து வேண்டுகோள் வைக்கப்பட்டு வருகிறது.

அந்த அளவிற்கு வெற்றி பெற்ற இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் விஜய்சேதுபதி பேசும்போது, இந்த படத்தின் படத்திற்கு செல்லும்போது நான் ஒரு களிமண் ஆகத்தான் சென்றேன். வெற்றிமாறன் சார் நான் என்னை அந்த வாத்தியார் கதாபாத்திரமாக மாற்றினார்” என்று கூறினார்.

சூரி நன்றி தெரிவித்து பேசும்போது, “இப்படி எனக்கு கிடைத்துள்ள வெற்றியை எதிர்காலத்தில் சரியாகப் பயன்படுத்திக் கொள்வேன் என நம்புகிறேன்” என்று கூறினார்.

இயக்குனர் வெற்றிமாறன் பேசும்போது, “இந்தப் படத்தில் வழக்கமான டெம்ப்ளேட் இல்லை. அதையும் ஏற்றுக் கொண்டு இரண்டாம் பாகத்திற்கும் காத்திருப்பதாக சொன்ன அனைவருக்கும் நன்றி. இன்னும் இது போன்ற புதிய முக்கியமான கதைக்களங்களை சொல்வதற்கும் ஊக்கமாக இருக்கும்.

ரெட் ஜெயண்ட் படத்தைப் பார்ப்பதற்கு முன்பு ராஜா சார் படத்தப் பார்த்துவிட்டு ‘பெரிய படமாக வரும். என்ன மாதிரியான இசை வேண்டுமோ கேள்’ என கேட்டு படத்திற்கு முழு ஆதரவும் கொடுத்தார்.

ஏனெனில் நான் படத்தின் பின்னணி இசைக்கு குறைவான நேரத்தையே கொடுத்தேன். அதை எல்லாம் பொறுத்துக் கொண்டார். அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி” என்றார்