மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டணியுடன் வெளியாகி வரவேற்பு பெற்ற படம் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று. அமரர் கல்கி எழுதிய நாவலுக்கு உயிர் கொடுக்கும் விதமாக இந்த படத்தை உருவாக்கிய மணிரத்னம் முதல் பாகத்தில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் வரும் ஏப்-14ம் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. அதற்கான புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தற்போது இந்த இரண்டாம் பாகம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னதாக அதாவது ஏப்ரல் 21ஆம் தேதி சில இடங்களில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை திரையிட போவதாக அறிவித்துள்ளார் மணிரத்னம்.
இதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ், தான் இயக்கிய விக்ரம் படம் வெளியாவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக தனது கைதி படத்தையும் ஒருமுறை பார்த்துவிட்டு விக்ரம் படத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும் என குறிப்பிட்டு இருந்தார்.
அந்த பாணியில் தற்போது பொன்னியின் செல்வன் படம் பார்க்காதவர்கள் அதை பார்த்துவிட்டு இரண்டாம் பாகத்தை பார்க்க வந்தால் கதையை புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்கும் என்ற நோக்கத்தில் தான் இப்படி சில இடங்களில் முதல் பாகத்தை வெளியிட மணிரத்னம் முடிவெடுத்துள்ளார் என்பது தெரிகிறது.