V4UMEDIA
HomeNewsKollywoodஅனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வெளியான ஆதிபுருஷ் போஸ்டர்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வெளியான ஆதிபுருஷ் போஸ்டர்

பான் இந்தியா நடிகராக மாறிவிட்ட பிரபாஸ் நடித்துவரும் படங்களில் ஒன்று ஆதி புருஷ். இயக்குனர் ஓம் ராவத் இயக்கி வரும் இந்த படம் ராமாயணத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் ராமனாக பிரபாஸ் நடிக்க சீதையாக கீர்த்தி சனான் நடித்துள்ளார். ராமனின் சீடரான ஐயப்பன் கதாபாத்திரத்தில் நடிகர் தேவதத்தா நாகே நடித்துள்ளார்.

சமீபத்தில் ராம நவமியை முன்னிட்டு பிரபாஸின் ராமர் கதாபாத்திரம் கொண்ட போஸ்டர் ஒன்றை ரசிகர்களுக்காக படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடிகர் தேவதத்தா நாகே தோன்றும் அனுமன் வேடத்திற்கான தெய்வீகம் ததும்பும் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்..

ராமபிரானுக்கு துணையாகவும், பாதுகாவலராகவும், அனுமனின் பக்தர்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த புனிதமான அனுமன் ஜெயந்தியின் நன்னாளில் அவர்களது பக்தர்களுக்காக பட குழுவினர் இந்த பிரத்யேக போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.

Most Popular

Recent Comments