அசுரன் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான படம் விடுதலை. சூரி கதாநாயகனாக நடிக்க, விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி இதன் முதல் பாகம் தற்போது தமிழில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் சூரி, விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரிகளாக நடித்த கௌதம் மேனன், சேத்தன், கதாநாயகி பவானி ஸ்ரீ என அனைவரது பங்களிப்பும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் தெலுங்கிலும் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படத்தை பிரபல தயாரிப்பாளரும் நடிகர் அல்லு அர்ஜுனனின் தந்தையுமான அல்லு அரவிந்த் தனது கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் தெலுங்கில் வெளியிடுகிறார்.