V4UMEDIA
HomeNewsKollywoodமித்ரன் ஆக மீண்டும் ஆக்சன் அவதாரம் எடுக்கும் சத்யராஜ்

மித்ரன் ஆக மீண்டும் ஆக்சன் அவதாரம் எடுக்கும் சத்யராஜ்

எண்பது, 90களில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். அதன்பிறகு சமீப வருடங்களாக அவர் குணச்சித்திர நடிகராக மாறியபிறகு பெரும்பாலும் ஹீரோ அல்லது ஹீரோயின் தந்தையாக, காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பில் மட்டுமே தன்னுடைய முகத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் நடித்துவரும் வெப்பன் என்கிற படத்தில் மீண்டும் ஒரு அதிரடி ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சத்யராஜ். இந்த படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு மித்ரன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது குறித்த போஸ்டர் ஒன்றையும் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.

தரமணி, ராக்கி உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் இணைந்து நடித்து வரும் வசந்த் ரவி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

குகன் சென்னியப்பன் இந்த படத்தை இயக்கியுள்ளார் ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக தன்யா ஹோப் நடித்துள்ளார்.  டைரக்டர் ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

Most Popular

Recent Comments