புராண காவியங்களில் அனைவரையும் கவர்ந்த காவியம் சாகுந்தலம். இந்த காவியத்தை மையப்படுத்தி தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் குணசேகர் சாகுந்தலம் என்கிற பெயரிலேயே பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாக இருக்கிறது. சமந்தா சகுந்தலை கதாபாத்திரத்திலும் மலையாள நடிகர் தேவ் மோகன் துஷ்யந்தன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகை சமந்தா உள்ளிட்ட பட குழுவினர் சென்னை. ஹைதராபாத். கேரளா என மாறி மாறி பயணித்து வருகின்றனர்.
இன்னும் படம் வெளியாக பத்து நாட்களே இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் ட்ரைலரை வெளியிட்டுள்ளது .