V4UMEDIA
HomeNewsKollywoodஇரு மொழிகளில் வெளியாகும் காளிதாஸ் ஜெயராமின் அவள் பெயர் ரஜினி

இரு மொழிகளில் வெளியாகும் காளிதாஸ் ஜெயராமின் அவள் பெயர் ரஜினி

விக்ரம் படத்தில் கமலின் மகனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் காளிதாஸ் ஜெயராம். அதைத்தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது என்கிற படத்தில் கதாநாயகனாகவே நடித்திருந்தார் காளிதாஸ்.

இந்த நிலையில் தற்போது மலையாளம், தமிழ் என இரு மொழிகளில் உருவாகி வரும் படத்தில் நடித்துள்ளார் காளிதாஸ். மலையாளத்தில் இந்த படத்திற்கு ரஜினி என்றும் தமிழில் இந்த படத்திற்கு அவள் பெயர் ரஜினி என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பெயர் ரஜினி என்று இருந்தாலும் இது கதையின் நாயகியை மையப்படுத்தி உருவாகியுள்ள படம். வினில் சக்காரியா வர்கீஸ் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தில் கதாநாயகியாக நமிதா பிரமோத் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே உதயநிதி நடிப்பில் வெளியான நிமிர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்.

அது மட்டுமல்ல விஜய்யுடன் பிகில் படத்தில் இணைந்து நடித்த நடிகை ரெபா மோனிகா ஜானும் இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை பிரபல மலையாள இளம் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்டுள்ளார்.

Most Popular

Recent Comments