நடிகை ராஷ்மிகா மந்தனா குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தவர். தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது தற்போது பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்து விட்டார்.
இந்த நிலையில் இந்த வருட துவக்கத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்திலும் இணைந்து நடித்து விட்டார். தற்போது தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் உருவாகும் ரெயின்போ என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார். விரைவில் வெளியாகவுள்ள சாகுந்தலம் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளவரும் இவர்தான்.
இந்த ரெயின்போ படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை அமலா நடிக்க இந்த படத்தை சாந்தரூபன் என்பவர் இயக்குகிறார் இந்த படத்தின் துவக்க விழா பூஜை இன்று நடைபெற்றது. படப்பிடிப்பும் உடனடியாக துவங்கியுள்ளது.
சுல்தான் படத்தை தொடர்ந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது .