அருண்விஜய் நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அச்சம் என்பது இல்லை. இயக்குனர் விஜய் தனது வழக்கமாக பாணியில் இருந்து விலகி அதிரடி ஆக்சன் படமாக இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இதில் கதாநாயகிகளாக எமி ஜாக்சன் மற்றும் மலையாளத் திரையுலகை சேர்ந்த நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் காட்சிகள் லண்டன் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

அருண்விஜய்யின் திரையுலக பயணத்தில் முதல்முறையாக மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த லைக்கா நிறுவனத்தினர் இந்த படத்தின் கன்டென்ட் மீது வைத்துள்ள நம்பிக்கையால் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது. படம் அனேகமாக மே மாதம் சம்மர் விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.