V4UMEDIA
HomeNewsKollywoodகுழந்தையின் கோரிக்கையை நிறைவேற்ற வீடியோ காலில் தரிசனம் தந்த விஜய்

குழந்தையின் கோரிக்கையை நிறைவேற்ற வீடியோ காலில் தரிசனம் தந்த விஜய்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்ததாக குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரசிகர்களை கொண்டிருப்பவர் என்றால் அது நடிகர் விஜய் தான். சின்ன குழந்தைகள் கூட அவரது பாடல் டிவியில் வந்து விட்டால் உடனே தங்களை மறந்து நடனம் ஆக ஆரம்பித்து விடுகிறார்கள்.

இதை சோசியல் மீடியாவில் வெளியாகும் பல வீடியோக்களில் நாம் பார்த்திருக்கிறோம். அப்படி தற்போது ஒரு குழந்தை ஒன்று விஜய் அங்கிள் என்னை பார்க்க வாங்க என்று கூறி ஒரு வீடியோ மூலமாக அழைப்பு விடுத்தது. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.

விஜய் அங்கிள் என்னை பார்க்க வாங்க என இணையத்தில் வைரலான பல்லாவரத்தை சேர்ந்த குழந்தையின் வீடியோ உடனடியாக விஜய் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் தளபதி விஜய் வீடியோ கால் மூலம் பேசி நலம் விசாரித்து குழந்தையை மகிழ்வித்தார்.

குழந்தையின் அந்த கோரிக்கை வீடியோவும் அதற்கு விஜய் உடனடியாக செவி சாய்த்து வீடியோ கால் மூலமாக அந்த குழந்தையிடம் பேசிய அந்த பண்பும் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்று வருகிறது.

Most Popular

Recent Comments