இந்த வாரம் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதன்முறையாக கதையின் நாயகனாக நடித்துள்ள விடுதலை என்கிற திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடித்துள்ள தசரா திரைப்படமும் வெளியாகி முதல் நாளிலேயே 30 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

சூரி கீர்த்தி சுரேஷ் இருவரும் ரஜினி முருகன் படத்தில் நடித்ததில் இருந்தே நெருங்கிய பாசக்கார அண்ணன் தங்கச்சியாக மாறிவிட்டார்கள். இந்த நிலையில் இருவரது படமும் ஒரே நாளில் வெளியாகி உள்ளது. தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

கீர்த்தி சுரேஷின் படம் குறித்து சூரி கூறும்போது, “என் அன்பு தங்கச்சி கீர்த்தி சுரேஷ், நானி ஸ்ரீகாந்த், ஓட்டேலா மற்றும் தசரா படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்” என்று கூறியிருந்தார்.

அதேபோல கீர்த்தி சுரேஷ், சூரியின் விடுதலை படத்திற்கு தனது பாராட்டுகளை தெரிவிக்கும்போது, ‘என் அன்பு அண்ணனின் விடுதலை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற உங்கள் அன்பு தங்கையின் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டு இருந்தார். இவர்களது இந்த பாச பதிவுகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.