பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் தங்கலான் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பீரியட் படமாக உருவாகி வருகிறது. இதன் பெரும்பாலான படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள கேஜிஎப் பகுதியில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விக்ரம் அடுத்ததாக தங்கலான் படத்திற்காக கேஜிஎப் கிளம்புவதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொன்னியின் செல்வன் விழாவில் கலந்து கொண்ட ரசிகர்கள் மற்றும் பலருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ள விக்ரம் நள்ளிரவு 12 மணி வரை பொறுமையாக இருந்து நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் நன்றி. அதே சமயம் 5 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி இரவு 11 மணி அதே உற்சாகம் அனைவரிடமும் இருந்தது” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்