V4UMEDIA
HomeNewsKollywoodசரத்குமாரை பார்த்து மணிரத்னம் கேட்ட கேள்வி

சரத்குமாரை பார்த்து மணிரத்னம் கேட்ட கேள்வி

மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் இரண்டு பாகங்களாக உருவாகி அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

கிட்டத்தட்ட இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழுவினர் துவங்கியுள்ளனர். தற்போது இந்த படத்தின் இசை மற்றும் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்தி உள்ளார்கள். இந்த விழாவில் படக்குழுவினர் அனைவருடனும் சிறப்பு விருந்தினர்களாக கமல் மற்றும் சிம்பு, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் நடிகர் சரத்குமார் பேசும்போது, “இந்த படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறும்போது, “படப்பிடிப்பின்போது மணிரத்னம் என்னை பார்த்து உங்களுக்கு ரொமான்ஸ் பண்ண வருமா என்று கேட்டார். இரண்டு பெண்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட என்னை பார்த்து அவர் அப்படி கேட்டது கஷ்டமாக இருந்தது” என்று கலாட்டாவாக கூறி கலகலப்பை ஏற்படுத்தினார்.

இந்த விழாவின் முதல் பாகத்தில் கலந்துகொண்டது போல, தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொள்ளாதது குறித்து பலரும் தங்களது மனக்குறையை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments