சமந்தா நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராக இருக்கும் படம் சாகுந்தலம். தெலுங்கு சினிமாவின் கமர்சியல் இயக்குனரான குணசேகர் இந்த படத்தை இயக்கியுள்ளார். புராண கால காவியமான சாகுந்தலம் நாவலை தழுவி இந்த படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ளது.

சகுந்தலையாக சமந்தா நடித்துள்ளார். துஷ்யந்த மகாராஜாவாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். இன்னும் இந்த படத்தில் அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், மதுபாலா, கௌதமி, மோகன் பாபு, பாலிவுட் நடிகர் கபீர் பேடி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை தற்போது 3டியில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளனர் சாகுந்தலம் குழுவினர். இந்த டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.