2020ல் வெளியான ரஜின்காந்த் நடித்த தர்பார் படத்தை தொடர்ந்து, இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் கடந்த மூன்று வருடங்களாக படம் எதுவும் இயக்கவில்லை. அடுத்ததாக அவர் யார் படத்தை இயக்கப் போகிறார் என்பதும் இன்னும் உறுதியாக வில்லை.

இந்த நிலையில் அனேகமாக அவர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவார் என்பது தற்போது சிவகார்த்திகேயன் வெளியிட்ட ஒரு சூசக தகவலால் திரையுலகிலும் அவாரது ரசிகர்களிடமும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் என்.எஸ் பொன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘1947 ஆகஸ்ட் 16’. கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் அவர் பேசும்போது ஏ.ஆர் முருகதாஸ் முதன்முதலாக தயாரித்த எங்கேயும் எப்போதும் படத்தின் இசை வெளியீட்டு விழாவை இதே இடத்தில் நின்று நான் தான் தொகுத்து வழங்கினேன். அதற்கடுத்ததாக அவர் தயாரித்த மான் கராத்தே படத்தில் ஹீரோவாக நடித்தேன்.

இப்போது இதோ இந்த படத்தின் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளேன். இதற்கு அடுத்து இன்னும் அடுத்த ஸ்டெப் ஒன்று உள்ளது. அதை பற்றி கூடிய விரைவில் தெரியவரும் என்று பொடி வைத்து பேசினார்.
அவர் பேச்சிலிருந்து அடுத்ததாக அவர் ஏ.ஆர் முருகதாஸ் டைரக்டர் நடிக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.