சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் ஆர்யாவை சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றி அப்படியே மாற்றி விட்டது. முன்னை விட தற்போது கதையையும் கதாபாத்திரங்களையும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஆர்யா. அப்படி அவர் தற்போது நடித்து வரும் படம் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்.

விருமன் படத்தை தொடர்ந்து இந்த படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் முத்தையா. வழக்கமான அவரது பாணியில் இதுவும் ஒரு கிராமிய கதையாக தான் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக வெந்து தணிந்தது காடு என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்த சித்தி இத்னாணி என்பவர் தான் நடிக்கிறார்.

ஜிவி பிரகாஷ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் டீசர், வரும் மார்ச் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது..