கடந்த பல வருடங்களுக்கு முன்பு வெற்றி பெற்ற படங்களை நவீன வடிவத்தில் டிஜிட்டலுக்கு மாற்றி இன்றைய இளைஞர்களும் ரசிக்கும் விதமாக திரையிடும் வேலை அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதில் இதற்கு முன்னதாக எம்ஜிஆர், சிவாஜி நடித்த படங்கள் மட்டுமே அப்படி டிஜிட்டலுக்கு மாற்றி ரிலீஸ் செய்யப்பட்டு வந்த நிலையில் சமீப வருடங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா, சிவாஜி, பாபா உள்ளிட்ட படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வெளியிடப்பட்டன. அப்படி வெளியாகும்போது வரவேற்பையும் பெற்றன.
இந்த நிலையில் நடிகர் அஜித் கதாநாயகனாக அறிமுகமான அமராவதி திரைப்படத்தையும் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் அந்த படத்தை தயாரித்த சோழா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின.ர்
1993 இல் வெளியான இந்த படம் தற்போது 30 வருடத்தை கடந்துள்ளது. வரும் மே-1ஆம் தேதி அஜித் பிறந்தநாளன்று அவரது ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக இந்த படத்தை வெளியிட இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.