சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருது பெற்ற இரண்டு படங்களில் ஒன்று ‘தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்’.
முதுமலை யானைகள் முகாமில் ராமு மற்றும் அம்மு என்ற இரண்டு யானைக்குட்டிகளை பராமரித்து வளரத்த பொம்மி மற்றும் பெல்லி என்கிற தம்பதியின் வாழ்க்கையையும் யானைகள் பாதுகாப்பு பற்றியும் பேசும் படமாக இது உருவாகி இருந்தது.
இந்த படத்திற்கு சிறந்த டாக்குமெண்டரி படம் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இந்த டாக்குமென்டரி படத்தை கார்த்திகி கொன்சால்வேஸ் என்பவர் இயக்கியிருந்தார். இவருக்கு தமிழக அரசு சார்பில் சமீபத்தில் ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தருமபுரி பகுதியில் மின் வெளியில் சிக்கி மூன்று யானைகள் இறந்தன அவற்றின் குட்டி தாயை இழந்து திக்கு தெரியாமல் காட்டிற்குள் சென்றது. அதை தேடி கண்டுபிடிக்கும் பொறுப்பை வனத்துறை மேற்கொண்டிருந்தது.
தற்போது அந்த குட்டியை கண்டுபிடித்து ஆஸ்கர் விருது பட தம்பதியினரான பொம்மன் மற்றும் பெல்லியிடம் வனத்துறையினர் ஒப்படைத்துள்ளனர். அந்த யானைக்’குட்டி இந்த தம்பதியினரிடம் செல்லமாக கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது..
இதை பார்த்த அனைவரும் சரியான நபர்களிடம் தான் இந்த யானைக்குட்டி சேர்ந்துள்ளது என்று அந்த ஆஸ்கர் தம்பதியினருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்