விக்ரம் பிரபுவின் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் ரெய்டு நடிகர். இந்தப்படத்தின் டீசறை தற்போது நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.

விக்ரம் பிரபுவை பொறுத்தவரை ஆரம்ப காலகட்டத்தில் நல்ல கதைகளாக தேர்வு செய்து நடித்து வந்தார். இடையில் சில காலம் படத்தேர்வில் கவனம் சிதறி விட்டாரோ என்று சொல்லும் விதமாக அவரது படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற தவறின.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான டாணாக்காரன் திரைப்படம் மீண்டும் விக்ரம் பிரபுவை வழக்கமான பார்முக்கு அழைத்து வந்துள்ளது. மீண்டும் கதையும், கதாபாத்திர தேர்வும் தான் தன்னை சினிமாவில் நிலைநிறுத்தும் என்பதை உணர்ந்து கொண்ட விக்ரம் பிரபு அப்படி தேர்ந்தெடுத்துள்ள ஒரு படம் தான் ‘ரெய்டு’.

கார்த்திக் என்பவர் இயக்கும் இந்த படத்தின் கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். விக்ரம் பிரபுவும் ஸ்ரீதிவ்யாவும் வெள்ளக்கார துரை என்கிற படத்தில் இதற்குமுன் இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் விரைவில் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார் முழுக்க முழுக்க ஆக்சனை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது என்பது டீசரை பார்க்கும்போதே தெரிகிறது