
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வரும் படம் ஜெயிலர். இந்த படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க, மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடத்தில் இருந்து சிவராஜ் குமார், தெலுங்கில் இருந்து காமெடி நடிகர் சுனில் மற்றும் பாலிவுட்டிலிருந்து ஜாக்கி ஷெராப் என முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

அது மட்டுமல்ல ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு மலையாள நடிகர் விநாயகன், நடிகர் வசந்த் ரவி உள்ளிட்டோர், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படம் சென்னை ஐதராபாத் ஜெய் சல்மர், மங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் மாறிமாறி நடைபெற்றது இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்படிப்பிற்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சனும் நேற்று விமானத்தில் சென்று இறங்கிய புகைப்படங்களும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.

இங்கே தற்போது சாலக்குடி பகுதியில் உள்ள அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ரசிகர்கள் ஆவலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.