விளையாட்டை மையப்படுத்தி அவ்வப்போது சில படங்கள் வெளியானாலும் அதில் கிரிக்கெட் விளையாட்டை தான் படைப்பாளிகள் அதிகம் கையில் எடுக்கின்றனர். அந்தவகையில் தற்போது கிரிக்கெட்டை மையப்படுத்தி தமிழில் லால் சலாம் மற்றும் லப்பர் பந்து என இரண்டு படங்கள் உருவாகி வருகின்றன. இந்த இரண்டு படங்களுமே இரண்டு கதாநாயகர்கள் நடிக்கும் விதமாக உருவாகி வருகின்றன.

இதில் லப்பர் பந்து படத்தில் கதாநாயகர்களாக ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இருவரும் நடிக்கின்றனர். கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் சமீபத்தில் வெளியான வெலோனி வெப்சீரிஸில் கதாநாயகியாக நடித்த சஞ்சனா இருவரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கி வருகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் கிரிக்கெட் பிரதானமாக இடம் பெறுவதால் நடிகர் அட்டகத்தி தினேஷ் தொடர்ந்து கிரிக்கெட் பயிற்சி ஈடுபட்ட பின்னரே பரப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

இவர் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.