ஒரு பக்கம் நயன்தாரா பிசியான நடிகையாக நடித்து வருவதுடன் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து நல்ல படங்களையும் தயாரித்து வருகிறார். இதில் நெற்றிக்கண், கூழாங்கல் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதுடன், கூழாங்கல் திரைப்படம் சர்வதேச திரைப்பட விருதுகளையும் பெற்றது.
இந்த நிலையில் தற்போது தமிழை தாண்டி முதன்முறையாக குஜராத்தி மொழியிலும் சுபயாத்ரா என்கிற படத்தை இவர்கள் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
சிகரம் தொடு மற்றும் வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த மோனல் கஜ்ஜார் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கதாநாயகனாக மல்ஹார் தக்கார் என்பவர் நடித்துள்ளார்.
தேசிய விருதுகள் பெற்ற மணிஷ் ஷைனி என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 28ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.