V4UMEDIA
HomeNewsKollywoodகாசேதான் கடவுளடா புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

காசேதான் கடவுளடா புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

நகைச்சுவை அம்சம் கொண்ட கமர்சியல் படங்களை இயக்குவதற்கு பெயர் போனவர் இயக்குனர் ஆர்.கண்ணன். சரியான பட்ஜெட்டில் குறித்த காலத்தில் இவர் படங்களை எடுத்து முடித்தாலும் இவரது படங்கள் வெளிய வரும்போது ஏதாவது ஒரு வகையில் சிக்கலை சந்தித்து ரிலீசில் தாமதம் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.

அந்த வகையில் இதற்கு முன்னதாக இவரது இயக்கத்தின் வெளியான தி கிரேட்  இண்டியன் கிச்சன் படமும் இதே போன்ற ஒரு தாமதத்தை சந்தித்தது.

அதற்கு முன்னதாகவே இவரது இயக்கத்தில் மிர்ச்சி சிவா, யோகி பாபு நடிப்பில் காசேதான் கடவுளடா என்கிற படம் உருவானது. இந்த படமும் பொருளாதார ரீதியான பிரச்சனை ஒன்றில் சிக்கி ரிலீஸ் ஆக முடியாமல் தள்ளி வைக்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி அந்த படம் வெளியாகும் என முதலில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் அந்த படத்தின் கடன் வழக்கு பிரச்சனை என்று நீதிமன்றத்தின் நிலுவையில் இருந்ததால், அந்த தேதியில்  படத்தை வெளியிட முடியவில்லை.

இந்த நிலையில் தற்போது பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து மார்ச் 24ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த படத்தில் குக் வித் கோமாளி சிவாங்கி, விஜய் டிவி புகழ், கருணாகரன், ஊர்வசி என ஒரு நகைச்சுவை நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

Most Popular

Recent Comments