விஜய் ஆண்டனி நடிப்பில் படப்பிடிப்பிலும் ரிலீஸுக்கு தயார் நிலையிலுமாக கிட்டத்தட்ட 7 படங்கள் அடுத்தடுத்து இருக்கின்றன. இதில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள பிச்சைக்காரன் 2 படமும் ஒன்று.
இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் சசி இந்த இரண்டாம் பாகத்தை சில காரணங்களால் இயக்க முடியாமல் ஒதுங்கிக்கொள்ள முதன்முறையாக இயக்குனர் பொறுப்பையும் ஏற்று இந்த படத்தை இயக்கி முடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இந்த படம் பக்க கமர்சியல் ஆக்சன் படமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் விஜய் ஆண்டனி விபத்துக்கு உள்ளாகி அதன்பிறகு தற்போது உடல் நலம் தேறி படத்தின் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த படம் உருவாக ஆரம்பித்த சமயத்திலேயே இந்த படத்தில் பிகிலி, ஆன்ட்டி பிகிலி என இரண்டு கதாபாத்திரங்களை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார். இதில் பிகிலி யார், ஆன்ட்டி பிகிலி யார் என்கிற சஸ்பென்ஸ் இப்போது வரை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் படம் விரைவில் வெளியாக தயாராகி வரும் சூழலில் இதன் பிரமோஷன் நிகழ்ச்சிகளையும் மெல்ல மெல்ல ஆரம்பித்துள்ளார் விஜய் ஆண்டனி.
அதன் ஒரு பகுதியாக இந்த இரண்டு கதாபாத்திரங்களில் பிகிலி என்பது யார் என்பதை நாளை அதிகாரப்பூர்வமாக வெளி உலகத்திற்கு காட்ட இருக்கிறார் விஜய் ஆண்டனி. இது குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி விட்டுள்ளது