பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் தற்போது அங்கே முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஆனாலும் இவர் தமிழுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பே ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படம் மூலமாக நன்கு அறிமுகமானவர்தான். இதற்கிடையே உள்ள காலகட்டத்தில் அங்கே மிகப் பெரிய நடிகையாக வளர்ந்து விட்ட கங்கனா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மறைந்த புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவான தலைவி என்கிற படத்திலும் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் சந்திரமுகி 2 படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் கங்கனா. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த முதல் பாகம் பெற்ற மிகப்பெரிய வெற்றி நாடறிந்தது. அதைத் தொடர்ந்து இந்த இரண்டாவது பாகத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இயக்குனர் பி வாசு இயக்கி வருகிறார்.
தமிழில் இருந்து சிருஷ்டி டாங்கே, மகிமா நம்பியார், லட்சுமி மேனன் உள்ளிட்ட நாயகிகள் நடித்தாலும் இந்த படத்தில் கங்கனா என்ட்ரி கொடுத்தது படத்திற்கு இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது.
இவ்வளவு நாட்களாக சந்திரமுகி 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்த கங்கனா இன்று தனது படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். மேலும் படக்குழுவினருடன் விடைபெற்று கிளம்பிய கங்கனா முதன்முறையாக இந்த படப்பிடிப்பில் ராகவா லாரன்ஸுஉடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.