Home News Kollywood சூர்யா – சிவா படத்திற்கான புரோமோ படப்பிடிப்பு நிறைவு

சூர்யா – சிவா படத்திற்கான புரோமோ படப்பிடிப்பு நிறைவு

அண்ணாத்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா தற்போது சூர்யா நடிக்கும் அவரது 42வது படத்தை இயக்கி வருகிறார். வரலாற்று பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தில் கதாநாயகியாக திசா பதானி நடிக்க, இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டீசரை வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் டைட்டிலையும் அன்றே அறிவிக்க உள்ளனர்.

இந்த அறிவிப்புக்காக என தனியாக தற்போது ஒரு புரோமோ டீசருக்கான படப்பிடிப்பையும் நடத்தி முடித்துள்ளனர்