சரவணா ஸ்டோர்ஸ் தமிழகமெங்கும் தனது புகழை நிலை நாட்டிய லெஜெண்ட் சரவணா அண்ணாச்சி, கடந்த வருடம் திரையுலகிலும் அடி எடுத்து வைத்து லெஜன்ட் என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் ஒரு நடிகராக மக்களிடம் அவரை கொண்டு சேர்க்க பெரிய அளவில் உதவியது.

அந்த படத்தில் மீசையில்லாமல் பார்ப்பதற்கே ஒரு ஹாலிவுட் நடிகர் போல வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளித்தார் லெஜெண்ட் சரவணா. அந்த படத்தை தொடர்ந்து தனது அடுத்த பட அறிவிப்பு குறித்து விரைவில் வெளியாகும் என்றும் அப்போது கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது திடீரென மீசையுடன் கூடிய தனது புதிய தோற்றத்தை, விதவிதமான ஸ்டைலில் தான் எடுத்துக் கொண்ட புதிய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளார் லெஜெண்ட் சரவணா.

குறிப்பாக தெலுங்கு இளம் நடிகர் அல்லு அர்ஜுன் பாணியில் அதே போன்ற உடையில் அண்ணாச்சி இதில் புதிய ஆளாகவே நமக்கு தெரிகிறார்.

இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளதுடன், “அடுத்த உருமாற்றம்.. விபரங்கள் விரைவில்” என்று சஸ்பென்ஸும் வைத்துள்ளார் லெஜெண்ட் சரவணா அண்ணாச்சி. இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வயதிலாக பரவி வருகின்றன