ஈரம் படம் மூலம் வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமானவர் அறிவழகன். அதைத்தொடர்ந்து பல வருட இடைவெளிக்கு பிறகு ஈரம் பட ஹீரோ ஆதியுடன் கூட்டணி சேர்ந்து தற்போது சப்தம் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். வழக்கம் போல அறிவழகனின் ஹாரர் த்ரில்லர் பாணி படமாக இது உருவாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக கன்னக்குழி அழகி நடிகை லைலா இணைந்துள்ளார். கடந்த இரண்டாயிரத்தில் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த லைலா அதன்பிறகு பத்து வருடங்களுக்கு மேலாக சினிமாவிலிருந்து ஒதுங்கி குடும்ப வாழ்க்கையை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வருடம் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததலன் மூலம் தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார் லைலா. தொடர்ந்து நல்ல கதைகளில் நடிக்க முடிவு செய்துள்ள லைலா அந்த விதமாக தற்போது சப்தம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார்.