V4UMEDIA
HomeNewsKollywoodநீண்ட இடைவெளிக்கு பிறகு கே.ஆர் விஜயா நடிக்கும் மூத்த குடி

நீண்ட இடைவெளிக்கு பிறகு கே.ஆர் விஜயா நடிக்கும் மூத்த குடி

தமிழ் சினிமாவில் இன்றளவும் பேசப்படுகின்ற சீனியர் நடிகைகளில் மிக முக்கியமானவர் கே ஆர் விஜயா. கடந்த சில வருடங்களாகவே பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கி ஓய்வெடுத்து வருகிறார் கே ஆர் விஜயா. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட கே.ஆர் விஜயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த கோடை என்கிற திரைப்படம் வெளியானது.

இந்த நிலையில் தற்போது மூத்தகுடி என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கே ஆர் விஜயா. இந்த படத்தை இயக்குனர் ரவி பார்க்கவன் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் இயக்குனரும் நடிகருமான திமிரு பட புகழ் தரும் கோபி வில்லனாக நடித்துள்ளார். நிஜத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கே.ஆர்.விஜயாவுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து இயக்குனர் கூறும்போது, “மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால் அந்தந்த காலகட்டத்தில் பயன்படுத்திய பொருட்களை தேடிப்பிடித்து படத்தில் பயன்படுத்தியுள்ளோம். திரையில் நீங்கள் பார்க்கும் போது அந்த காலகட்டத்தில் வாழும் அனுபவத்தை தரும். மூத்த நடிகை கே ஆர் விஜயா அம்மா இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பின் போது கேரவனே வேண்டாம் படக்குழுவினருடன் இருக்கிறேன் என்று எப்போதும் படப்பிடிப்பில் தான் இருப்பார். எல்லோருடனும் வெகு இயல்பாக நட்புறவோடு பழகினார். அவரை மீண்டும் திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்” என்றார்.

Most Popular

Recent Comments