Home News Kollywood சிம்பு – தேசிங் பெரியசாமி கூட்டணியை இணைத்த கமல்

சிம்பு – தேசிங் பெரியசாமி கூட்டணியை இணைத்த கமல்

கமல் தற்போது விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிசியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் அவரது நடிப்பிலேயே எச்.வினோத், பா.ரஞ்சித், மணிரத்னம் ஆகியோர் டைரக்ஷனில் அடுத்தடுத்த படங்கள் உருவாக இருக்கின்றன.

அதே சமயம் இன்னொரு பக்கம் தனது ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தை விக்ரம் படத்தின் வெற்றி மூலமாக தூக்கி நிறுத்திய கமல் தொடர்ந்து இளம் நடிகர்கள் இயக்குனர்கள் கூட்டணியையும் தனது தயாரிப்பில் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து வருகிறார்.

அந்த வகையில் இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் ஒப்பந்தமானது.

இந்த நிலையில் தற்போது லேட்டஸ்டாக இயக்குனர் தேசிங் பெரியசாமி டைரக்சனில் சிலம்பரசன் நடிக்கும் புதிய பட அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இயக்குனர் தேசிங் பெரியசாமி சிம்பு இருவரும் கமலை சந்தித்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ராஜ்கமல் நிறுவனத்தின் 51 வது படமாகவும் சிலம்பரசன் நடிக்கும் படம் 52 ஆவது படமாகவும் உருவாக இருக்கிறது.