ஆர்யா நடித்த கலாப காதலன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இகோர். தற்போது ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கும் அவரது 51 வது படமாக உருவாகி வரும் மேன் என்கிற படத்தை இயக்குகிறார் இகோர். இந்த படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் முதன்முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்தின் திரைக்கதையை பாக்கியராஜின் மகளான சரண்யா பாக்யராஜ் எழுதியுள்ளார் என்பது ஆச்சரியமான ஒரு விஷயம்..
இந்தப் படத்துக்கு ‘மேன்’ என்று தலைப்பு வைத்ததன் காரணத்தைப் பகிர்ந்துகொண்ட இயக்குநர் இகோர், “ஆண்மை என்பது ஒரு அகங்காரக் கூறாக மாறிவிட்டது. இது ஒரு போலி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. மேலும், இது பெண்களை அடக்கி, ஆதிக்கம் செலுத்துவது போன்ற ஒரு பிம்பத்தையும் கட்டமைத்துள்ளது.
இந்த இயற்கைக்கு எதிரான ஒரு பெண்ணின் கிளர்ச்சிப் போரை உள்ளடக்கியதே ‘மேன்’ என்ற தலைப்புக்குக் காரணம். ஹன்சிகா மோத்வானி இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு முன்பு பார்த்திராத ஹன்சிகாவை ரசிகர்கள் திரையில் பார்த்து ரசிப்பார்கள் என்று கூறியுள்ளார்