2002ல் இயக்குனர் சுசி கணேசன் தனது முதல் படமாக இயக்கிய பைவ்ஸ்டார் என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கனிகா, பின்னர் இயக்குனர் சேரனின் ஆட்டோகிராப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து சில வருடங்கள் பிசியாக நடித்தவர், பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார்.. தற்போது கடந்த ஐந்து வருடங்களாக தனது இரண்டாவது இன்னிங்ஸில் சினிமா, சின்னத்திரை என மீண்டும் பிஸியாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்ல தற்போதைய இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் உடலை எப்படி கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்த டிப்ஸ்களையும் தொடர்ந்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் கனிகா. இந்த நிலையில் தற்போது வலது முழங்காலில் முழுவதும் பேண்டேஜ் சுற்றப்பட்டு வாக்கர் உதவியுடன் தான் நிற்கும் புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் கனிகா.

இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு நடிகை ராதிகா சரத்குமார் இதுகுறித்து விசாரித்த போது, கணுக்காலில் ஏற்பட்டுள்ள முறிவு மற்றும் முழங்கால் தசைநார் காயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக கூறியுள்ளார் கனிகா. மேலும் இந்த புதிய காலணி(பூட்ஸ்)களின் உதவியுடன் பேலன்ஸ் பண்ண கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ள அவர், ஒரு வாரம் கழிந்து விட்டது.. இன்னும் ஐந்து நாட்கள் போக வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.