தனுஷ் நடித்த 3, கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை ஆகிய படங்களை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கி இருந்தார். இந்த நிலையில் சில வருட இடைவெளி விட்டு தற்போது மீண்டும் லால் சலாம் என்கிற படத்தை அவர் இயக்குவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, மிக முக்கியமான இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இதில் நடிக்கிறார்.
மேலும் எண்பதுகளில் முன்னாள் கதாநாயகியாக வலம் வந்த நடிகை ஜீவிதா நீண்ட இடைவெளிக்கு பிறகு லால் சலாம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். அனேகமாக இந்த படத்தில் அவர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது..
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதியில் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.