எட்டு தோட்டாக்கள் படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு ஜீவி என்கிற சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தில் மூலம் கவனிக்க வைத்தவர் நடிகர் வெற்றி. இதைத் தொடர்ந்து கடந்த வருடம் ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக ஜீவி 2 திரைப்படம் வெளியானது.

இந்த நிலையில் தற்போது மெமரிஸ் என்கிற படத்தில் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ளார். சைகாலஜிகள் த்ரில்லராக உருவாகியுள்ள. இந்த படம் வரும் மார்ச் 10ஆம் தேதி வெளியாகிறது.

இதில் கதாநாயகியாக பார்வதி அருண் நடித்துள்ளார். இவர் கடந்த வருடம் சசிகுமார் நடிப்பில் வெளியான காரி படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இந்த படத்தை இரட்டை இயக்குனர்களான சியாம் மற்றும் பிரவீன் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது படத்தின் நாயகன் வெற்றி பேசுகையில், “இந்தப்படத்தின் கதையை என்னிடம் சொன்னார்கள். 2 வருடத்தில் பேசிக்கொண்டே இருந்தோம். அந்த நேரத்தில் வேறு ஹீரோவை வைத்துப் பண்ணுங்கள் என்று சொன்னேன் ஆனால் நான் தான் வேண்டும் என வெயிட் பண்ணி இந்தப்படம் எடுத்துள்ளார்கள். என்னை நம்பியதற்காக இயக்குநர்களுக்கு நன்றி. முழுக்க அடர்ந்த காட்டுக்குள், கஷ்டப்பட்டு படம்பிடித்துள்ளோம். எனக்கு இதில் 4 தோற்றங்கள். படம் நன்றாக வந்துள்ளது என்று கூறினார்

இயக்குநர் ப்ரவீன் பேசும்போது, “மெமரீஸ் வைத்து இதுவரை நிறையப் படங்கள் வந்துள்ளது. ஆனால் இதில் நீங்கள் படம் பார்க்கும் போது நீங்களே அந்த பாத்திரமாக மாறிவிடுவீர்கள் அப்படி மாறி பார்க்கும் போது படம் எளிதாகப் புரியும். இந்தப்படம் உங்களுக்கு நிறைய ஆச்சரியம் தரும்” என்றார்.

இயக்குநர் ஷியாம் பேசும்போது, “நான் மலையாளி.. தமிழில் படம் செய்துள்ளேன். இக்கதைக்காகக் கேரளாவில் தயாரிப்பாளர் தேடின போது யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி நாயகனாக நடிக்கிறார் என்று கூறியபோது ஷிஜு சார் ஜீவி படம் பார்த்து உடனே படம் செய்யலாம் என ஒத்துக்கொண்டார். வெற்றி இப்படத்தில் 4 தோற்றங்களில் வருவார். இப்படம் மிக சிக்கலான சைக்கலாஜிக்கல் திரில்லர். படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். உங்கள் ஆதரவைப் படத்திற்குத் தாருங்கள் நன்றி” என்று கூறினார்.