V4UMEDIA
HomeNewsKollywoodஇன்னிசை நிகழ்ச்சி நடத்த தயாராகிறார் வித்யசாகர்

இன்னிசை நிகழ்ச்சி நடத்த தயாராகிறார் வித்யசாகர்

இளையராஜா, ஏ ஆர் ரகுமான், அனிருத், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் ஒரு பக்கம் படங்களுக்கு பிஸியாக இசையமைத்துக் கொண்டு, இன்னொரு பக்கம் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் தங்களது இசை நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் தனது இசை நிகழ்ச்சியை நடத்தினார். இந்தநிலையில் அடுத்ததாக பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் தானும் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார்.

பிரபல இசை அமைப்பாளர்கள் இளையராஜா, இசைப்புயல் AR ரஹ்மான் , ராக்ஸ்டார் அனிருத், S.P.பாலசுப்ரமணியம், யேசுதாஸ் உட்பட பல இசையமைப்பாளர்கள் மற்றும் பிரபல பாடகர்களை வைத்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் NOISE AND GRAINS நிறுவனம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், அஜித்குமார், விஜய் மற்றும் முக்கியமான நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசை அமைப்பாளராக பணியாற்றிய வித்யாசாகருடன் முதல்முறையாக இணைத்து பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.

கொச்சியில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் அதற்கான தேதி மற்றும் இடங்களை விரைவில் அறிவிப்பதாகவும் NOISE AND GRAINS நிர்வாக இயக்குனர்கள் கார்திக் சீனிவாஸ், அசோக்சந் மஹாவீர் ஆகியோர் தெரிவித்தனர்

Most Popular

Recent Comments