கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக சிறந்த நடிகையாக வலம் வருபவர் நடிகை சுஷ்மிதாசென். இவரது திரையுலக பயணத்தில் பல துணிச்சலான, சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் கூட ஐபிஎல் நிறுவனர் லலித் மோடியுடன் தான் லிவிங் டுகெதர் ரிலேசன்ஷிப்பில் இருந்து வருவதாக கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தற்போது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக இன்னொரு அதிர்ச்சி தகவலை கூறி உள்ளார் சுஷ்மிதா சென்.
இது குறித்து அவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென எனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது. என்னுடைய கார்டியாலஜிஸ்ட் நீ பெரிய இதயம் கொண்டவள் என்று மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.
உடனடி நடவடிக்கை எடுத்து உரிய நேரத்தில் உதவிய மக்களுக்கு நன்றி. அவர்களை பற்றி இன்னொரு பதிவில் விரிவாக கூறுகிறேன். என்னுடைய நலம் விரும்புன்ற, என்னை நேசிக்கும் உங்களுக்கு ஒரு தகவலை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பதிவு. இப்போது எல்லாம் நலம். நான் மீண்டும் ஒரு வாழ்க்கைக்கு தயாராகி விட்டேன்” என்று கூறியுள்ளார்.