யாரடி நீ மோகினி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மித்ரன் ஆர் ஜவஹர். அந்த படத்தை தொடர்ந்து தனுஷை வைத்து தொடர்ந்து குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கினார். அதைத் தொடர்ந்து இரண்டு படங்களை இயக்கினாலும் அவை பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த வருடம் தனுஷை வைத்து அவர் இயக்கிய திருச்சிற்றம்பலம் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி படமாக அமைந்தது. இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து அவர் ஈஷான் என்கிற அறிமுக ஹீரோவை வைத்து அரியவன் என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்து தற்போது ரிலீஸ் வரை கொண்டு வந்து விட்டார். அந்த படம் வரும் மார்ச் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாதவன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் மித்ரன் ஆர் ஜவஹர். இந்த படத்திற்கான கதை வசனம் எழுதும் பொறுப்பை எழுத்தாளர் ஜெயமோகன் ஏற்றுள்ளார்.
ஜெயமோகன் சமீபத்தில் பொன்னியின் செல்வ,ன் இந்தியன் 2 ஆகிய படங்களில் கதை வசன இலாகாவில் பணியாற்றி முடித்துவிட்டு தற்போது மாதவன் படத்திற்கு தனது பணிகளை தொடங்க உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .
றைந்த பிரபலர் எழுத்தாளர் சுஜாதா இல்லாத குறையை தீர்க்கும் விதமாக பிரபல இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.