கௌதம் மென இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான எனை நோக்கி பாயும் தோட்டா என்கிற படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் தர்புகா சிவா. அதைத்தொடர்ந்து கிடாரி என்கிற படத்திலும் ரசிகர்களின் வரவேற்பு பெரும் பாடல்களை கொடுத்து நம்பிக்கை தரும் இசையமைப்பாளராக உயர்ந்தார்.
ஆனால் இடையில் என்ன நடந்ததோ படங்களுக்கு இசையமைப்பதை குறைத்துக்கொண்டு நடிப்பில் ஆர்வம் செலுத்தி வந்தார். அதன்பிறகு அவரை நடிகராகவும் தொடர்ந்து படங்களில் பார்க்க முடியவில்லை.
ஒரு நல்ல இசையமைப்பாளரை தமிழ் சினிமா இழந்து விடுமோ என்று நினைத்த நிலையில் தற்போது மீண்டும் இசையமைப்பாளராக தன் பணியை தொடர்கிறார் தர்புகா சிவா.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருள்நிதி நடித்த தேஜாவு என்கிற திரைப்படம் வெளியாகி அதன் வித்தியாசமான கதை அம்சத்திற்காக பாராட்டப்பட்டது. முன்னாள் பத்திரிகையாளரும் இயக்குனருமான அரவிந்த் சீனிவாசன் இந்த படத்தை இயக்கிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் குக்கு வைத்து கோமாளி புகழ் அஸ்வினை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்திற்கு இசையமைப்பதற்காக தர்புகா சிவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திலும் மறுவார்த்தை பேசாதே, வண்டியில நெல்லு வரும், ஆகிய பாடல்களை போன்று மீண்டும் ஒரு ஹிட் பாடல் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.