V4UMEDIA
HomeNewsKollywoodசைக்காலஜிக்கல் த்ரில்லராக ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவாகும் இரவு

சைக்காலஜிக்கல் த்ரில்லராக ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவாகும் இரவு

எட்டு தோட்டாக்கள், ஜீவி, ஜீவி 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் வெற்றி. குறிப்பாக ஜீவி திரைப்படம் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி இவருக்கு வரவேற்பு பெற்று தந்தது. இந்த நிலையில் புதிய சைக்காலஜி திரில்லர் படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார் வெற்றி.

சிகை, பக்ரீத் உள்ளிட்ட வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஜெகதீசன் சுபு இந்த படத்தை இயக்குகிறார். பக்ரீத் படத்தை தயாரித்த எம் எஸ் முருகராஜ் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அரியா செல்வராஜ் என்பவர் அறிமுகம் ஆகிறார்.

ஒரே நாளில் நடக்கின்ற மாதிரியான த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாகி வருகிறது. தன் கண் முன்னால் நடப்பது நிஜமாக கற்பனையா என்று தெரியாத ஒரு இளைஞன் அந்த பிரச்சனையில் இருந்து எப்படி வெளி வருகிறான் என்பது தான் இந்த படத்தின் கதை என்கிறார் இயக்குனர் ஜெகதீசன் சுபு.

ஏற்கனவே சிகை படத்தில் ஒரு திருநங்கையின் காதலையும் பக்ரீத் படத்தில் ஒரு ஒட்டகத்திற்கும் மனிதனுக்குமான அன்பையும் பற்றி கதை சொன்னவர் நிச்சயமாக இந்த படத்திலும் ஏதாவது புதிதாக சொல்வார் என எதிர்பார்க்கலாம்.

Most Popular

Recent Comments