V4UMEDIA
HomeNewsKollywoodஇரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள தீர்க்கதரிசி

இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள தீர்க்கதரிசி

நடிகர்கள் அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் தீர்க்கதரிசி. சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை இரட்டை இயக்குனர்களான பி.ஜி.மோகன் – எல்.ஆர்.சுந்தரபாண்டி ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். கமர்சியல் கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குனர்கள் ஆர்கே செல்வமணி, பேரரசு, ஹரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதிலும் குறிப்பாக போலீஸ் படங்களை இயக்குவதற்கு பெயர் பெற்ற இயக்குனர் ஹரி இந்த நிகழ்வின் பேசும்போது, “போலீஸ் படம் பார்ப்பதே ஒரு கர்வம் தான். அதிலும் இந்த படத்தில் நடிகர் அஜ்மல்  போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காவல்துறைக்கே உண்டான மிடுக்குடன் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறார்” என்று கூறினார்.

படத்தின் நாயகன் அஜ்மல் பேசும்போது, சத்யராஜ் சாருடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்கிற ஆசை இந்த படத்தில் நிறைவேறியுள்ளது. இந்த படத்தில் முக்கியமான 15 விஷயங்கள் இருக்கின்றன. அவை ரசிகர்களை நிச்சயமாக ஈர்க்கும் என்று கூறி படம் குறித்த சுவாரசியத்தை அதிகப்படுத்தி உள்ளார்.

Most Popular

Recent Comments