தமிழக அரசின் மிகப்பெரிய வருமானமே டாஸ்மாக் கடைகளில் இருந்து தான் வருகிறது என்று சொல்லும் விதமாக மது விற்பனையில் இந்தியாவிலேயே தமிழகம் மிகப்பெரிய அளவில் கொடிகட்டி பறக்கிறது. மதுவினால் விபத்துகளிலும் தற்கொலைகளிலும் உடல் பாதிப்புகளாலும் பல வகையிலும் மரணங்கள் ஏற்படுகின்றன.
இதனால் மதுவிலக்கை அமல்படுத்த கோரி பல தன்னார்வ தொண்டர்கள் அவ்வப்போது பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் போதையில்லா தமிழ்நாடு என்கிற முழக்கத்தினை முன்வைத்து #DYFI இயக்கம் தற்பொழுது ஒரு கோடி பேர் கையெழுத்து போடும் விதமாக கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த அமைப்பினரின் போதையில்லா தமிழ்நாடு என்கிற பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் விதமாக நடிகர் விஜய்சேதுபதி தனது கையெழுத்தையும் போட்டுள்ளார்.
ஆண்கள் தான் என்று இல்லாமல் பெண்களும் இந்த திட்டத்தில் பங்கெடுத்த கொள்ள வேண்டும், தங்களது கையெழுத்தை இடவேண்டும் என்கிற எண்ணத்தை தமிழக பெண்களுக்கு ஏற்படுத்தும் வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த இயக்கத்தின் கையெழுத்து வேட்டையில் தனது கையெழுத்தை பதிவிட்டு பங்களிப்பு செய்துள்ளார்.