Home News Kollywood விஜய்சேதுபதியை தொடர்ந்து விமலை இயக்கும் விருமாண்டி

விஜய்சேதுபதியை தொடர்ந்து விமலை இயக்கும் விருமாண்டி

மறைந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பெரிய கருப்ப தேவரின்  மகனான விருமாண்டி தந்தையை பின்பற்றி திரையுலகில் நுழைந்து, அதேசமயம் ஒரு இயக்குனராக தன்னை மாற்றிக் கொண்டார் அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம் என்கிற படத்தை இயக்கியிருந்தார்.

குடும்பத்தின் நல்வாழ்வுக்காக வெளிநாட்டுக்கு உழைக்கச் சென்ற கிராமத்து இளைஞன் ஒருவன் எதிர்பாராத மரணம் அடைந்தால் அங்கு இருந்து அவனது உடலாவது ஊர் வந்து சேர்வதற்கு என்ன பாடுபட வேண்டியிருக்கிறது என்பதை மையப்படுத்தி உருக்கமாக இந்த படத்தை உருவாக்கியிருந்தார் விருமாண்டி.

மிகுந்த பாராட்டுகளை பெற்ற அந்த படத்தை தொடர்ந்து தற்போது விமல் நடிக்கும் படத்தை இயக்குகிறார் விருமாண்டி. சிங்கம்புலி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. மற்றும் நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பும் துவங்க இருக்கிறது. இந்த படம் குறித்து விமல் கூறும்போது எனது அன்பு பங்காளி இயக்குனர் விருமாண்டியுடன் பணிபுரிய போவது ரொம்பவே மகிழ்ச்சி தருகிறது என்று கூறியுள்ளார்.