V4UMEDIA
HomeNewsKollywoodவசந்தபாலனின் உதவி இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் டீமன்

வசந்தபாலனின் உதவி இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் டீமன்

அங்காடித்தெரு’, ‘அரவான்’, ‘காவிய தலைவன்’, ‘ஜெயில்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரமேஷ் பழனிவேல், ‘Demon’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இயக்குநர் லிங்குசாமி வழங்கிய ‘பிகினிங்’ படத்தில் கதாநாயகனாக நடித்த சச்சின் இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ்குமாரின் நடிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயில்’ படத்தில் சிறந்த நடிப்பையும், ‘தேன்’ படத்திற்காக பல விருதுகளையும் பெற்ற அபர்நதி இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியான ‘உடன்பால்’ இணையத்தொடரிலும் அபர்நதியின் நடிப்பிற்கு சிறந்த விமர்சனங்களும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

தேசியவிருது வென்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்க, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸின் ஆர். சோமசுந்தரம் படத்தைத் தயாரித்து இருக்கிறார். சஸ்பென்ஸ் – த்ரில்லருடன் ஹாரர் எலிமெண்ட்ஸூம் சேர்ந்து உருவாகி இருக்கும் ‘Demon’ படத்தின் முதல் பார்வையை நடிகர் விஜய்சேதுபதி & இயக்குநர் மிஷ்கின் வெளியிட்டுள்ளனர்

கும்கி அஸ்வின், இன்ஸ்டாகிராம் சென்சேஷன் ரவீனா தாஹா, பிக் பாஸ் புகழ் ஸ்ருதி பெரியசாமி, மிப்புசாமி, பிரபாகரன், அபிஷேக், தரணி, நவ்யா சுஜி, சலீமா மற்றும் பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Most Popular

Recent Comments