தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்ட அவர், அடுத்ததாக வெளியான சண்டக்கோழி படத்தின் மூலம் இன்னும் அதிக அளவு ரசிகர்களை சென்றடைந்தார்.

அதை தொடர்ந்து தமிழில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்தாலும் மலையாளத்தில், தெலுங்கில் அதிக அளவில் படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு திருமணம், சில காலங்களுக்குப் பிறகு திருமணம் முறிவு என சொந்த வாழ்க்கை பிரச்சனைகள் காரணமாக திரை உலகை விட்டு ஒதுங்கியிருந்தார்.

கடைசியாக 2014ல் வெளியான விஞ்ஞானி என்கிற படத்தில் தமிழில் நடித்திருந்தார். அதேபோல தெலுங்கிலும் 10 வருடத்திற்கு முன்பு நடிப்பதை நிறுத்திவிட்டிருந்தார். மீரா ஜாஸ்மின் இந்த நிலையில் தற்போது விமானம் என்கிற படத்தில் நடிப்பதன் மூலம், தெலுங்கு தமிழ் என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் கொடுக்கிறார் மீரா ஜாஸ்மின். இந்த படத்திலும் அவர் கதாநாயகியாகவே நடிக்கிறார்.
அவரது நாற்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தில் கதாநாயகி கேரக்டர் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.