V4UMEDIA
HomeNewsKollywoodமசாஜ் பார்லர் அக்கிரமங்களை அம்பலப்படுத்த வரும் பகாசுரன்

மசாஜ் பார்லர் அக்கிரமங்களை அம்பலப்படுத்த வரும் பகாசுரன்

திரவுபதி படத்தை இயக்கியதன் மூலம் பரபரப்பாக பேசப்பட்டவர் இயக்குனர் மோகன் ஜி. ஜாதிகளுக்குள் நடக்கும் சூழ்ச்சிகளை பற்றி பேசி இருந்தார். அதை தொடர்ந்து வெளியான அவரது ருத்ரதாண்டவம் படத்திலும் கூட இதே போல ஜாதி பிரச்சனையை தான் வேறுவிதமாக பேசி இருந்தார்.

இந்தநிலையில் அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள பகாசுரன் படத்திலும் ஜாதியைத்தான் மையப்படுத்தி இருப்பாரோ என்பது போன்று பேச்சுக்கள் எழுந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் தான் எடுத்துக்கொண்ட விஷயம் குறித்து வெளிப்படையாகவே கூறியுள்ளார் இயக்குனர் மோகன் ஜி.

தற்போது சமூகத்தில் மசாஜ் சென்டர் என்கிற பெயரில் நடக்கும் அநியாயங்கள் ஆன்லைன் விபச்சாரம் ஆகியவற்றில் என்ன நடக்கிறது என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மக்களுக்காக, பெற்றோர்களுக்காக உருவாக்கப்பட்ட படம் இது.

நான் திரும்ப திரும்ப சொல்லும் ஒரே விஷயம் பெற்றோர்களுக்கும் இளம் பெண்களுக்கும்  இளம் வாலிபர்களுக்கும் நவீன மொபைல்களில் என்ன வகையான செயலிகள் ஆபத்தான வகையில் அமைந்துள்ளன. அவற்றில் இருந்து தங்களை காத்துக்கொள்வது எப்படி என்பதை விரிவாக இந்த திரைப்படத்தில் சொல்லியிருக்கிறோம். படம் வந்த பிறகே படத்தில் என்னென்ன சர்ச்சைகள் உள்ளது என்பது மக்களுக்கு தெரிய வரும். என்று கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments