Home News Kollywood திருவின் குரலுக்காக அருள்நிதியுடன் கைகோர்க்கும் சேதுபதி இயக்குனரின் சிஷ்யர்

திருவின் குரலுக்காக அருள்நிதியுடன் கைகோர்க்கும் சேதுபதி இயக்குனரின் சிஷ்யர்

விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஹரிஷ் பிரபு, அதைத்தொடர்ந்து புரியாத புதிர் படத்தில் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் தற்போது இவர் அருள்நிதி நடிக்கும் திருவின் குரல் என்கிற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி கதாநாயகனாக நடிக்கும் அருள்நிதி இந்தப் படத்தில் பேச்சுக்குறைபாடு கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான அழகான மற்றும் உணர்ச்சி பூர்வமான பிணைப்பை கூறும் விதமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.

இதில் அருள்நிதியின் தந்தையாக பாரதிராஜா நடிக்கிறார் கதாநாயகியாக ஆத்மிகா நடிக்க சுபத்ரா ராபர்ட், மோனேகா சிவா, அஷ்ரப், ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம், மகேந்திரன், முல்லையரிசி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.