கடந்த சில மாதங்களாகவே தசைநார் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார் சமந்தா. இதனால் படப்பிடிப்புகளில் நடிப்பதற்கு சற்று ஓய்வு கொடுத்து விட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் பழையபடி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள சமந்தா சமீபத்தில் பழனி மலை வந்து முருகனை தரிசித்து சென்றுள்ளார்.

இது பற்றிய அவர் கூறும்போது மருத்துவர்களின் மிகப்பெரிய முயற்சியால் தான் நன்கு தேறி விட்டதாக கூறி, இதற்காக தான் பழனி முருகனை வேண்டி இருந்ததாகவும் அந்த வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக பழனி வந்ததாகவும் தெரிவித்தார்.

அதேபோல தேவராட்டம் என்கிற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் அவர்களும் பழனி வந்து முருகனை தரிசித்து சென்றுள்ளனர்.

இதில் சமந்தா படிகளிலேயே ஏறி முருகனை தரிசித்தார். கௌதம் கார்த்திக் மஞ்சிமா இருவரும் வின்ச் மூலமாக மலைக்கு சென்று முருகனை வழிபட்டனர்.