V4UMEDIA
HomeNewsKollywoodஇனிதே நடந்த இரும்புத்திரை இயக்குனரின் திருமணம்

இனிதே நடந்த இரும்புத்திரை இயக்குனரின் திருமணம்

விஷால் நடித்த இரும்புத்திரை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிஎஸ் மித்ரன். முதல் படத்தில் ஆன்லைன் மூலமாக பொதுமக்களின் வங்கி கணக்குகளில் நடைபெறும் மோசடிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து பாராட்டு பெற்றவர் பிஎஸ் மித்ரன்.

அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறாத நிலையில் அடுத்ததாக கார்த்தியை வைத்து சர்தார் என்கிற படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றி படமாக கொடுத்தார். தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர்கள் பட்டியலில் பிஎஸ் மித்திரனும் இடம் பிடித்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது நீண்ட நாள் காதலியான ஆஷாமீரா ஐயப்பன் என்பவரை இன்று இரு வீட்டார் சம்மடதத்துடன் திருமணம் செய்து கொண்டார் பி எஸ் மித்ரன்.

ஆஷா மீரா ஐயப்பன் ஒரு சினிமா பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் இவர்களுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இன்று திருமணம் இனிதே நடந்துள்ளது.

சர்தார் பட நாயகன் கார்த்தி நேரிலேயே சென்று இந்த திருமணத்தில் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் இந்த திருமணத்தில் இயக்குனர்கள் ரத்தினகுமார் மற்றும் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Most Popular

Recent Comments