நெடுஞ்சாலை என்கிற படம் மூலம் கவனிக்கத்தக்க கதாநாயகனாக மாறியவர் நடிகர் ஆரி அர்ஜுனன். அதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தாலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆரி அர்ஜுனன் தமிழக மக்களிடம் மட்டுமல்லாமல் உலகத்தமிழர்கள் அனைவரிடமும் மிகப்பெரிய நன்மதிப்பைப் பெற்று அந்த போட்டியில் டைட்டிலையும் வென்றார்.
அதை தொடர்ந்து தற்போது பகவான் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் அவருக்கு புதிதாக ஒரு பதவி தேடி வந்துள்ளது. ஆம் அமெரிக்காவில் இயங்கி வரும் முன்னணி மற்றும் முதலீட்டு தள நிறுவனமான நண்பன் குழுமத்தின் இந்திய செயல்பாட்டிற்கான விளம்பர தூதுவராக ஆரி அர்ஜுனன் நியமிக்கப்பட்டு இருக்கிறார் என அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.
அமெரிக்காவில் இயங்கி வரும் ‘நண்பன் அறக்கட்டளை’- சுய நிதி ஆதாரத்தில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம். உலகம் முழுவதும் பல்வேறு வகையான சேவை திட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட இந்நிறுவனம், விளையாட்டு, கலை, கலாச்சாரம், கிரீன் பிளானட் எனப்படும் பசுமை பூமியை ஊக்குவித்தல், குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சிகிச்சை வழங்குதல் என ஏராளமான திட்டங்களில் தன்னுடைய பங்களிப்பை வழங்கி கொண்டிருக்கிறது. இந்த அறக்கட்டளை மூலம் தற்போது உலகம் முழுவதும் 35க்கும் மேற்பட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நண்பன் சோழா லேண்ட் ஹோல்டிங்ஸ் மற்றும் நண்பன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக பங்குதாரருமான நரேன் ராமசாமி கூறுகையில், ” நடிகர் ஆரி அர்ஜுனன் தனது பல்வேறு சேவை முயற்சிகள் மூலம் சமூகத்தை காப்பாற்றும் வகையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்காக அறியப்பட்டவர். அவருடைய செயல்பாடு, நண்பனின் தொலைநோக்குப் பார்வை மற்றும் பணிகளுடன் முழுமையாக ஒத்துப்போகின்றன. மேலும் எங்களின் அதிகாரப்பூர்வ தூதராக அவரை முன்னிலைப்படுத்துவதிலும், பிரதிநிதித்துவம் அளிப்பதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்
அமெரிக்காவில் இயங்கி வரும் ‘நண்பன் அறக்கட்டளை’- சுய நிதி ஆதாரத்தில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம். உலகம் முழுவதும் பல்வேறு வகையான சேவை திட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட இந்நிறுவனம், விளையாட்டு, கலை, கலாச்சாரம், கிரீன் பிளானட் எனப்படும் பசுமை பூமியை ஊக்குவித்தல், குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சிகிச்சை வழங்குதல் என ஏராளமான திட்டங்களில் தன்னுடைய பங்களிப்பை வழங்கி கொண்டிருக்கிறது. இந்த அறக்கட்டளை மூலம் தற்போது உலகம் முழுவதும் 35க்கும் மேற்பட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நண்பன் சோழா லேண்ட் ஹோல்டிங்ஸ் மற்றும் நண்பன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக பங்குதாரருமான நரேன் ராமசாமி கூறுகையில், ” நடிகர் ஆரி அர்ஜுனன் தனது பல்வேறு சேவை முயற்சிகள் மூலம் சமூகத்தை காப்பாற்றும் வகையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்காக அறியப்பட்டவர். அவருடைய செயல்பாடு, நண்பனின் தொலைநோக்குப் பார்வை மற்றும் பணிகளுடன் முழுமையாக ஒத்துப்போகின்றன. மேலும் எங்களின் அதிகாரப்பூர்வ தூதராக அவரை முன்னிலைப்படுத்துவதிலும், பிரதிநிதித்துவம் அளிப்பதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்