கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சசி டைரக்ஷனில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் வெளியானது. இதுவரை வெளியான விஜய் ஆண்டனி படங்கலிலேயே சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றியை பெற்ற இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பிச்சைக்காரன் 2 என்கிற பெயரிலேயே இயக்குவதன் மூலம் ஒரு இயக்குனராகவும் அடி எடுத்து வைத்துள்ளார் விஜய் ஆண்டனி. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் மலேசியாவில் கலந்து கொண்டபோது கூட அவருக்கு படப்பிடிப்பில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றரை நிமிட ஸ்னீக் பீக் ட்ரைலரை வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி. இதற்கு முன்னதாக இந்த படத்தின் அறிவிப்பு குறித்து வெளியானபோது பிகிலி, ஆன்டி பிகிலி என்கிற போஸ்டர்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார் விஜய் ஆண்டனி.

இந்த நிலையில் இந்த ஸ்னீக் பீக் டீசரில் முழுக்க முழுக்க ஆன்டி பிகிலி பற்றி காட்டும் விதமாக படத்தின் வில்லன் கதாபாத்திரமான ராகுல் தேவ் நடித்த காட்சிகளை மட்டுமே காட்டியுள்ளார் விஜய் ஆண்டனி.
மூளை மாற்று அறுவை சிகிச்சையை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதை உருவாகி உள்ளது என்பதை படத்தில் விஞ்ஞானியான கிட்டியும் இன்னொரு நபரும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை வைத்து உணர முடிகிறது.

அதுமட்டுமல்ல வில்லன் ராகுல் தேவ் அவர்கள் பேசுவதை டிவியின் வழியாக கவனித்து பார்ப்பதன் மூலம் ஏதோ புதிய திட்டத்திற்கு யோசனை செய்வது போலவும் அதனால் ஏற்படும் விளைவுகளை மையப்படுத்தி இந்த கதை நகரும் என்பதும் ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

விஜய் ஆண்டனி நடித்த ஒரு காட்சி கூட இந்த ட்ரெய்லரில் இடம் பெறவில்லை. இப்படி சினிமா வரலாற்றில் ஒரு ஹீரோவை காட்டாமலேயே அதுவும் வில்லனை மட்டுமே காட்டி ஒரு ட்ரெய்லர் வெளியாகி இருப்பது இதுதான் முதன்முறையாக இருக்கும்.